வெறித்தனமான கேமிங் பிரியர்கள் மிஸ் பண்ண கூடாத ஒரு ஸ்மார்ட்போன் இது!

இந்த வார தொடக்கத்தில் நிகழ்ந்த உலகளாவிய அறிமுகத்தை தொடர்ந்து, நுபியா ரெட் மேஜிக் 3எஸ் கேமிங் ஸ்மார்ட்போன் ஆனது இன்று இந்தியாவில் அறிமுகம் ஆனது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் முதல் பிரபல இ-காமர்ஸ் தளமான ஃப்ளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும்.


கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட நுபியா ரெட் மேஜிக் 3எஸ்-ன் மாபெரும் சிறப்பம்சமாக இதன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் இதன் முன்னோடி நுபியா ரெட் மேஜிக் 3 ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்களையும் இது கொண்டுள்ளது. இந்தியாவில் நுபியா ரெட் மேஜிக் 3 எஸ் ஸ்மார்ட்போனின் விலை என்ன? எப்போது விற்பனை தொடங்குகிறது? இதன் முழு அம்சங்கள் என்ன? என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.


இந்திய விலை நிர்ணயம்:

இந்தியாவில் நுபியா ரெட் மேஜிக் 3 எஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.35,999 க்கு வாங்க கிடைக்கும். இது மெகா சில்வர் (ஸ்பேஸ் கிரே) வண்ண மாறுபாட்டில் வாங்க கிடைக்கும்.

இதன் டாப்-எண்ட் ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆன 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடல் ஆனது ரூ.47,999 என்கிற இந்திய விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது. இது சைபர் ஷேட் (சிவப்பு மற்றும் நீலம்) வண்ண மாறுபாட்டில் வாங்க கிடைக்கும்.