பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கும் நிறுவனத்திடம் ரூ.10 கோடி வாங்கிய பாஜக

ஹைலைட்ஸ்



  • ஆர்.கே.டபிள்யூ. நிறுவனம் அமலாக்கத்துறையின் தீவிர விசாரணையில் உள்ளது.

  • 2014-15 நிதி ஆண்டில் இந்த நிறுவனத்திடம் பாஜக 10 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறது.


பயங்கரவாதத்துக்கு நிதி அளித்ததாக விசாரணையில் சிக்கியுள்ள நிறுவனத்திடம் இருந்து பாஜக 10 கோடி ரூபாய் நிதி உதவி பெற்றிருக்கிறது.


தேர்தல் ஆணையத்திடம் பாஜக சமர்ப்பித்துள்ள கட்சி பெற்ற நிதி குறித்த அறிக்கையில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. 2014-15 நிதி ஆண்டில் ஆர்.கே.டபிள்யூ. டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்திடம் பாஜக 10 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறது.