முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோஃபைபர் சேவையின் அறிமுகத்திற்கு பின்னர், மிகவும் பிரபலமான பிராட்பேண்ட் திட்டங்களின் பட்டியலின் முழுக்க ஜியோஃபைப்பரின் திட்டங்களை மட்டுமே காண முடிந்தது.
ஆரம்பத்தில் ஜியோவின் பிராட்பேண்ட் திட்டங்களை பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் பிராட்பேண்ட் திட்டங்களால் நெருங்க முடியவில்லை, சமன் கூட செய்ய முடியவில்லை. பின்னர் சுதாரித்துக்கொண்ட ஏர்டெல் நிறுவனம் சிறிய மாற்றங்களை செய்தது. இப்போது பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்கள் ஆனது ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் திட்டங்களுடன் கடுமையாக போட்டியிடுகின்றன என்றே கூறலாம், குறைந்த வேக வரம்புகளுக்கும், அதிவேக வரம்புகளுக்கும் கூட இது பொருந்தும்.