திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ஓசூர் மாணவி தனது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்: நன்னிலம் அருகே நீலக்குடி பகுதியில் அமைந்துள்ளது மத்திய பல்கலை கழகம். இந்த பல்கலைகழகத்தில் ஓசூரை சேர்ந்த மைதிலி என்ற மாணவி பி.எட் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது விடுதி அறையில் தனிமையில் இருந்த அவர் மின் விசிறியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்
பின்னர் இதுகுறித்து நன்னிலம் காவல்துரையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் வழக்கு பதிவு செய்து மைதிலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மைதிலி அதே பல்கலைகழகத்தில் வேதியியல் துறையில் படித்து வரும் நாகப்பட்டினத்தை சார்ந்த நிர்மல் என்ற மாணவருடன் பழகி வந்துள்ளதாக தெரிந்தது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் மைதிலி தனது அறையில் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.