நாங்கள்தான் அடித்தோம்

இதனை ஏபிவிபி மாணவர்கள் மறுத்தனர். மேலும், ஜே.என்.யூ.வின் இடதுசாரி மாணவர்கள் சங்கம் தங்களைத் தாங்களே அடித்துக் காயப்படுத்திக் கொண்டு இப்படி நாடகமாடுவதாகவும் தெரிவித்தனர்.

அதே சமயம், ஜேஎன்யூ விடுதியில் முகமூடி அணிந்து கொண்டு தாக்குதல் நடத்திய மர்மகும்பலில் பெண்களும் இடம் பிடித்திருந்தனர் என்பதும், இந்த தாக்குதல்கள் ஏ.பி.வி.பி. அமைப்பில் உறுப்பினராக உள்ள மாணவர்கள் இருந்த அறையில் நடத்தப்படவில்லை என்பதும் மேலும் சந்தேகத்தைக் கிளப்பியது

இதற்கிடையில், மருத்துவமனையில் இருந்த மாணவர்கள் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் என்ற மாணவி தெரிவித்த செய்திகள் ஆச்சரியமூட்டும் வகையில் இருந்தன. அவர் பேசியபோது “அவர்களுக்கு (தாக்குதல் நடத்தியவர்களுக்கு) எங்கள் பெயர் தெரிந்து இருந்தது. பெயரை சொல்லி அடித்தார்கள்” என்று தெரிவித்தார்.