வாஷிங்டன்: வெப்பநிலை அதிகரிக்கும்போது கொரோனா வைரஸ் தொற்று குறையும் என மசாசூட் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் (எம்.ஐ.டி) கணித்துள்ளார்கள்.
எம்ஐடியின் ஆராய்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி, கொரோனா வைரஸ்களால் ஏற்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை 18 டிகிரி செல்சியஸுக்குக் குறைவான சராசரி வெப்பநிலையி்ல் உருவாகி உள்ளன. வெப்பநிலை அதிகரிக்கும் போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறையும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.